இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆள் கடத்தல் வழக்கு: மாவட்ட நீதிமன்ற அமீனா கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பணம் மோசடி செய்தவரை ஆட்டோவில் கடத்திச் சென்ற வழக்கில் போலீஸார் விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற அமீனாவைக் கைது செய்தனர்.

News image
Updated On :18 பிப்ரவரி 2015, 12:46 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பணம் மோசடி செய்தவரை ஆட்டோவில் கடத்திச் சென்ற வழக்கில் போலீஸார் விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற அமீனாவைக் கைது செய்தனர். இவ் வழக்கில் ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (50). மில் கூலித் தொழிலாளி. இவரது மனைவி பத்மாவதி மீது பலருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி செய்ததாக 2014 அக்டோபர் மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. இந்த பண மோசடி வழக்கில் புகார்தாரர் பழனிச்செல்வம் ஆகும்.

இந்நிலையில் இம் மாதம் 10-ம் தேதி (செவ்வாய்கிழமை) வேலைக்குச் செல்வதற்காக ராமகிருஷ்ணாபுரம் புறவழிச் சந்திப்பில் முத்துக்குமார் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது ஆட்டோவில் வந்த நால்வர் முத்துக்குமாரை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். இவர் கூக்குரலிடவே, அங்கிருந்து சுமை தூக்கும் தொழிலாளிகள் இரு சக்கர வாகனங்களில் ஆட்டோவை துரத்திச் சென்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் அருகே மடக்கிப் பிடித்தனர். அப்போது ஆட்டோவில் வந்த ஒருவர் தப்பி ஓடிவிட்டார். ஏனையோரையும் ஆட்டோவையும் பிடித்து சுமை தூக்கும் தொழிலாளிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையம் கொண்டுவந்து ஒப்படைத்தனர்.

விசாரணையில் ஆட்டோவை விருதுநகரைச் சேர்ந்த செந்தில்குமார் (27) என்பவர் ஓட்டி வந்துள்ளார். மேலும் ஆட்டோவில் வந்து கடத்தலில் ஈடுபட்டவர்கள் விருதுநகரைச் சேர்ந்த முனியாண்டி (38), பாண்டி (29) என்பது தெரிய வந்தது. இவர்கள் மூவரையும் வழக்குப் பதிவு செய்து போலீஸார் கைது செய்து, ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமீனாவாக பணிபுரிந்து வரும் ஸ்ரீவில்லிபுத்தூர், சக்கரைக்குளம் தெருவைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி (52) என்பவர் பத்மாவிடம் ரூ.8 லட்சம் கொடுத்துள்ளார். இதனை பத்மா திரும்பத் தராத காரணத்தால், இவர் மற்றும் இதே போல் பத்மாவிடம் பணத்தை பறிகொடுத்த பழனிச்செல்வம் ஆகியோர், விருதுநகரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து பத்மாவின் கணவரைக் கடத்தியதாக போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸார் முன்மை அமர்வு நீதிமன்ற அமீனா தட்சணாமூர்த்தியை கைது செய்தனர். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் முன்னிலைப்படுத்தப்பட்டார். இவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி கே.கவிதா உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.