இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கலசலிங்கம் பல்கலை. சார்பில் 1 லட்சம் டெங்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் சார்பில் ஒரு லட்சம் டெங்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் தயாரிக்கப்பட்டு, மருத்துவத் துறைக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

News image
Updated On :20 பிப்ரவரி 2015, 12:48 pm

கோ.ஜெயக்குமார்

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் சார்பில் ஒரு லட்சம் டெங்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் தயாரிக்கப்பட்டு, மருத்துவத் துறைக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில், கடந்த இரு மாதங்களில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டனர். சிலர் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டது. இந் நோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை மாவட்டம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கலசலிங்கம் பல்கலைக்கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் மாணவ மாணவியர் சுகாதாரத் துறையுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பேரணிகள் நடத்தினர்.

மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டெங்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை இலவசமாக அச்சிட்டு சுகாதாரத் துறைக்கு வழங்க வேந்தர் க.ஸ்ரீதரன் மற்றும் வேந்தரின் தனிச் செயலாளர் பேராசிரியர் முரளி கிருஷ்ணன் ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர்.
இதன் பேரில் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சம் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை வேந்தர் சார்பில்
பேராசிரியர்கள் ராமசாமி, எம்.ஜெயக்குமரன் ஆகியோர் சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் சம்பத்திடம் ஒப்படைத்தனர்.

பல்கலைக்கழகத்தின் சேவையை, சுகாதாரத் துறை சார்பில் டாக்டர் சம்பத் வெகுவாக பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.