இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சென்னையில் நாளை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சங்க மாநில மாநாடு

சென்னை, தாம்பரத்தில் தமிழ்நாடு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு பிப்ரவரி 21-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இது குறித்து சங்கத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவர் செ.பாலமுருகன், செயலாளர் ச.லட்சுமணன், மகளிர் அணியின் எஸ்.சௌந்தரி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

News image
Updated On :20 பிப்ரவரி 2015, 9:17 am

கோ.ஜெயக்குமார்

சென்னை, தாம்பரத்தில் தமிழ்நாடு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு பிப்ரவரி 21-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இது குறித்து சங்கத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவர் செ.பாலமுருகன், செயலாளர் ச.லட்சுமணன், மகளிர் அணியின் எஸ்.சௌந்தரி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அரசாணை 182 அமுல்படுத்தி, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு உத்தரவிட்டார். அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த மாநில முதல் மாநாடு சென்னை தாம்பரத்தில் பிப்ரவரி 21-ம் தேதி நடைபெறுகிறது.

மாநாட்டிற்கு சங்கத்தின் மாநில தலைவர் சு.பாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் ப.வளர்மதி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் ரா.சண்முகராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களும் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

மாநாட்டில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று பதவி உயர்வுக்கு ஆணையிட்ட முன்னாள் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்று அவர்கள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.