தமிழ்நாடு தங்கம் வெள்ளி வைரம் நகை வியாபாரிகள் சம்மேளனத்தின் 6-வது காரிய கமிட்டிக் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தலைவர் எஸ்.ஏ.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சு.மீனாட்சி சுந்தரம் வரவேற்றார்.
மனவளக் கலை மன்ற பேராசிரியர் எஸ்.காலசாமி, நகை வணிகர்களுக்கு அவசியமான யோகாசனப் பயிற்சி குறித்து விளக்க உரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழகம் முழுவதும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தங்கத்தின் விலை ஒரே விலையாக விற்கப்பட வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களின் பெரிய நகைக் கடைகளின் விளம்பரங்கள் காரணமாக, சிறிய நகைக் கடைகளுக்கு அதிகமான பாதிப்பு ஏற்படுவதால், பெரிய நகைக் கடைகளின் விளம்பர யுக்தியை மாற்றியமைத்து, சிறு வியாரிகளின் நலனை மத்திய மாநில அரசுகள் காக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரின் அனைத்து நகைக்கடை வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.