இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் பேரூராட்சி பகுதியில் டெங்கு பாதிப்பு குறித்து இயக்குநர் ஆய்வு

ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பேரூராட்சி பகுதியில் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பேரூராட்சிகளின் இயக்குநர் ராஜேந்திர ரத்னு நேரில் பார்வையிட்டு

News image
Updated On :11 ஜனவரி 2015, 12:33 pm

கோ.ஜெயக்குமார்

ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பேரூராட்சி பகுதியில் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பேரூராட்சிகளின் இயக்குநர் ராஜேந்திர ரத்னு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மம்சாபுரத்தின் அனைத்து வார்டுகளுக்கும் சென்ற இயக்குநர், கழிவு நீர் பாதைகள், குப்பைகள் தேங்கியிருந்த இடங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். முறையாக அனைத்து வார்டுகளிலும் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளவும், கொசு மருந்துகளை முறையாக அடிக்கவும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் குடிநீர் குழாய்களின் அருகே தேங்கும் நீரை உடனே அப்புறப்படுத்தவும், குடிநீரில் முறையான அளவு குளோரின் மருந்து கலந்து விநியோகிக்கவும் அலுவலர்களை கேட்டுக் கொண்டார். பின்னர் உரக்கிடங்கைப் பார்வையிட்ட அவர், அது முறையாக பேணப்படுவதாகக் கூறினார். அங்கு அவர் மரக்கன்றும் நட்டார்.

செய்தியாளர்களிடம் இயக்குநர் ராஜேந்திர ரத்னு கூறுகையில்: டெங்கு கொசு பாதிப்பு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க பேரூராட்சி நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும். காய்ச்சல் கண்டால், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடனே சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ஆய்வின் போது மதுரை மண்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் எம்.குணசேகரன், தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆ.காமராஜ்,  உதவி செயற் பொறியாளர் சம்பத்குமார், செயல் அலுவலர்கள் சித்திரைக்கனி, பூங்கொடி முருகு, ஞானசேகரன், பணி ஆய்வாளர்கள் கருப்பையா, கலைஞானம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக பேரூராட்சிகளின் இயக்குநர் சேத்தூர், செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதிகளில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாக இயக்குநர் பணீந்தர்ரெட்டி ஆகியோருடன் சென்று நேரடியாக டெங்கு பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.