காட்டுமன்னார்கோயில் அருகே பள்ளி வேன் சக்கரம் ஏறி 2 வயது குழந்தை சாவு
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள சித்தமல்லி கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்-ஆனந்தி தம்பதியின் மகன் சம்பத்(3). இவர் காட்டுமன்னார்குடி நகரத்தில் உள்ள கலைமகள் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில்


காட்டுமன்னார்கோயில் அருகே பள்ளி வேன் மோதிய விபத்தில் சிக்கி 2 வயது ஆண் குழந்தை மரணமடைந்தான்.
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள சித்தமல்லி கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்-ஆனந்தி தம்பதியின் மகன் சம்பத்(3). இவர் காட்டுமன்னார்குடி நகரத்தில் உள்ள கலைமகள் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார் இவர் பள்ளிக்கு பள்ளி வேனில் சென்று வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்கு செல்லும் போது பள்ளி வேனில் ஏற்றிவிட அவரது அம்மா ஆனந்தி, தனது 2வது குழந்தை திலீப்பை (2) வயது அழைத்து சென்றுள்ளார். அப்போது சம்பத்தை பள்ளி வேனில் ஏற்றிவிட்ட பின்பு, தாயின் கண் எதிரே திலிப் தலைமீது பள்ளி வேன் சக்கரம் ஏறி பரிதாபமாக இறந்தார்,
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் பள்ளி வேன்,மற்றும் ஸ்ரீமுஷ்னம் ஆய்வாளர் முரளி ஆகியோரை வாகனங்களை மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்பாட்டம் செய்தனர். இதனை தொடர்ந்து விபத்து குறித்த தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...