இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

போலி பத்திரம் தயாரித்து ரூ.6 லட்சம் மோசடி: இருவர் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், தாட்கோட்டை தாலுகா, கோட்டையூர், எழில்நகரைச் சேர்ந்தவர் துரைராஜ் மனைவி கமலம் (66).இவரிடம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சொக்கலாம்பட்டியைச் சேர்ந்த வே.

News image
Updated On :16 ஜனவரி 2015, 9:19 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலி பத்திரம் தயாரித்து ரூ.6 லட்சம் மோசடி செய்த வழக்கில் இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

சிவகங்கை மாவட்டம், தாட்கோட்டை தாலுகா, கோட்டையூர், எழில்நகரைச் சேர்ந்தவர் துரைராஜ் மனைவி கமலம் (66).இவரிடம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சொக்கலாம்பட்டியைச் சேர்ந்த வே.கருப்பசாமி (46), மணிகண்டன் ஆகியோர், விழுப்பனூர் கிராமத்தில் உள்ள 13.86 சென்ட இடம் தங்களுடையது என்று கூறி, 4.9.13 மற்றும் 14.12.13 ஆகிய தேதிகளில் கிரையம் பேசி ஒப்பந்தம்போட்டு, ரூ.6 லட்சம் பெற்றுள்ளார்கள்.

விசாரித்ததில், இடம் குறிப்பிட்ட இருவர் பெயருக்கு இல்லை என்பது தெரிய வந்ததுள்ளது. இதனையடுத்து கமலம், பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால் கருப்பசாமியும், மணிகண்டனும் போலியாக பத்திரம் தயாரித்து, கமலத்தை மிரட்டி, ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்தார்களாம்.இது குறித்து கமலம், மதுரையில் உள்ள உயர்நீதிமன்றக் கிளையில் புகார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், நத்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது.

இதன் பேரில் போலீஸார் கருப்பசாமி மற்றும் மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.