கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருநெல்வேலி மாவட்டத்தில் அக்காள், தங்கை பாசத்தை நினைவு கூறும் சதிகல் கண்டுபிடிப்பு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே அமைந்துள்ள ஆனைகும் கிராமத்தில் அக்காள், தங்கை பாசத்தை நினைவு கூறும் சதிகல்லை அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை

News image
Updated On :16 ஜனவரி 2015, 12:19 pm

ஜி.சுந்தரராஜன்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே அமைந்துள்ள ஆனைகும் கிராமத்தில் அக்காள், தங்கை பாசத்தை நினைவு கூறும் சதிகல்லை அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர்களும், திராவிட வரலாற்று ஆய்வுக்கழக இயக்குநர் இல.கணபதிமுருகன், தலைவர் ஆ.முத்துக்குட்டி ஆகியோர் கண்டறிந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து ஆய்வாளர்கள் தெரிவித்தது: சதிகல் என்பது போரில் அல்லது வீரநிகழ்வுகளில் ஈடுபட்டு இறந்த வீரரின் மனைவி, கணவனின் உடல் எரிக்கப்படும் சிதையில் விழுந்து உயிர் நீப்பாள், இத்ததைகய பெண்ணின் தியாகத்தை போற்றும் வகையில் நினைவுக்கல் நட்டு அல்லது சிலை எடுத்து அப்பெண்ணின் வம்சத்தார் வழிபாடு செய்து வந்தனர். சங்க காலத்திலிருந்து கி.பி 19-ம் நூற்றாண்டு வரை இவ்வழக்கம் இந்தியா முழுவதும் மக்களால் பின்பற்றப்பட்டு வந்தது. தமிழகத்தில் இம்முறை ஏறக்குறைய பெரும்பாலான சமூகத்தவர்களிடம் காணப்பட்டது. தற்போது தீப்பாய்ந்த இறந்த பெண்டிரின் நினைவாக சகிதல் கண்டறியப்பட்டுள்ளது.

கள ஆய்வின் போது இச்சதிகல் பற்றிய சில சுவாரசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளன. அச்சதிகல்லில் மூவரின் உருவங்கள் காணப்படுகின்றன. ஆண் ஒருவரின் அருகே இரு பெண்கள் இடம் பெற்றுள்ளனர். ஒரு பெண்மணி அமர்ந்த நிலையிலும், மற்றொரு பெண்மணி நின்ற நிலையிலும் காணப்படும் இச்சிற்பத் தொகுதியில் அமர்ந்த நிலையில் காணப்படும் பெண்ணை முத்துப்பிள்ளை எனவும், அருகில் நிற்கின்ற பெண்ணை அவளகது சகோதரி வன்னிப்பேச்சி என்றும் ஊரார் அழைக்கின்றனர்.

ஏதோ ஒரு தருவாயில் கணவன் இறந்துவிட உடன் தீப்பாய்ந்து இறக்க முத்துப்பிள்ளை முடிவெடுக்கிறாள். முத்துப்பிளை மீது அளவிலான பாசம் வைத்திருந்த அவரது தங்கை வன்னிப் பேச்சி அக்காவை விட்டு தன்னால் தனியே உயிர் வாழ முடியாது எனக்கூறி ஊரைக்கூட்டி ஒப்புதல் பெற்று அக்காவுடன் தானும் சிதையில் விழுந்து மாண்டாள். இவர்களது தியாகத்தை போற்றும் வண்ணம் கோயில் எடுப்பித்து இப்பெண்களின் வம்சாவளியினர் இன்று வரை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.