இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு தரப்பினர் மோதல்: மூவர் காயம்: நால்வர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டின் பொதுச் சுவர் தொடர்பான முன்விரதத்தில் இரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில் மூவர் காயம் அடைந்தனர். இரு தரப்பையும்

News image
Updated On :16 ஜனவரி 2015, 1:01 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டின் பொதுச் சுவர் தொடர்பான முன்விரதத்தில் இரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில் மூவர் காயம் அடைந்தனர். இரு தரப்பையும் சேர்ந்த 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் நால்வரைக் கைது செய்தனர்.

கூமாப்பட்டி, ஆர்.சி. தெருவைச் சேர்ந்தவர் தங்கத்துரை மனைவி ஜீவா (37). இவர்களின் குடும்பத்திற்கும் மூ.சுப்பையா (40) என்பவரின் குடும்பத்திற்கும் பொதுச் சுவர் தொடர்பாக 10 ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது.இந்நிலையில் தெரு வழியே வந்து கொண்டிருந்த ஜீவாவின் மகன் ஜோசப் (எ) விஜய் (17) வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது இவர்களின் உறவினரான அய்யனார் மகன் மணிக்குமார் என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். ஜோசப் (எ) விஜயிடம் எதிர் தரப்பைச் சேர்ந்தவர்கள் உன்னைக் கொலை செய்யப்போவதாகப் பேசிக் கொண்டிருந்ததை கேட்டதாகக் கூறியுள்ளார்.

அப்போது அங்கு வந்த எதிர் தரப்பினர் ஜோசப் (எ) விஜயை வழிமறித்து ஆபாசமாகப் பேசி கம்பி, அரிவாளால் தாக்கியுள்ளார்கள். இதில் பலத்த காயம் அடைந்த ஜோசப் (எ) விஜய் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜீவா, தனது மகன் தாக்கப்பட்டது குறித்து கூமாப்பட்டி காவல் நிலையத்தில் மூ.சுப்பையா (40), சு.மகேஸ்வரன் (21), சு.காளீஸ்வரன் (17), ச.மாரி (எ) முத்துராஜ் ஆகியோர் மீது புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து மகேஸ்வரன், காளீஸ்வரன் ஆகியோரைக் கைது செய்தனர்.

இச் சம்பவத்தின் தொடர்ச்சியாக மூ.சுப்பையா, கூமாப்பட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். ப.தங்கத்துரை (37), இ.அய்யனார், அ.மணிக்குமார் (23), அ.கொன்னையாண்டிராஜா, செ.அன்புராஜ், த.ஜோசப் (எ) விஜய் ஆகியோர் சட்ட விரோதமாகக் கூடி செங்கல், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதாயும், அதில் ச.முத்துராஜ் (33), சு.ஈஸ்வரி (43) ஆகியோர் காயம் அடைந்ததாயும் குறிப்பிட்டுள்ளார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தங்கத்துரை, மணிக்குமார் ஆகியோரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.