ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லி-ராமகிருஷ்ணாபுரம் அதிமுக ஊராட்சி செயலாளராக இருப்பவர் ச.ராஜேந்திரன் (54). இவருக்கும் இதே இடத்தைச் சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் திமுக ஒன்றியச் செயலாளர் கு.ஆறுமுகத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் மல்லி கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கி அருகே ராஜேந்திரன் வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது திமுக ஒன்றியச் செயலாளர் மல்லி கு.ஆறுமுகம், ஆறுமுகம் மகன்கள் ராமர், ராஜ்குமார், முத்தையா மகன் குருசாமி, கு.செந்தில் ஆகியோர் உருட்டுக் கட்டை, வீச்சு அரிவாளுடன் வந்து, ராஜேந்திரனை வழிமறித்து அதிமுக ஆட்சி என்று ஆடுகிறீர்களா? ஒழுங்கா இல்லை என்றால் தொலைத்து விடுவோம் என்று கூறி மிரட்டினார்களாம்.