கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரம் அருகே கட்டுமானப் பணியின் போது கீழே விழுந்து தொழிலாளர் சாவு

பீகார் மாநிலம் உத்தமயாதவ் (22). இவர் சிதம்பரம் அருகே கரிக்குப்பத்தில் அமைக்கப்பட்டு வரும் ஐஎல்எஃப்எஸ் மின் உற்பத்தி நிறுவனத்தில் கட்டுமானப்பணி செய்து வருகிறார். இந்நிலையில்

News image
Updated On :18 ஜனவரி 2015, 2:07 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே தனியார் மின்உற்பத்தி நிறுவனத்தில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து மரணமடைந்தார்.

பீகார் மாநிலம் உத்தமயாதவ் (22). இவர் சிதம்பரம் அருகே கரிக்குப்பத்தில் அமைக்கப்பட்டு வரும் ஐஎல்எஃப்எஸ் மின் உற்பத்தி நிறுவனத்தில் கட்டுமானப்பணி செய்து வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த போது கட்டடத்தின் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து காயமுற்றார். உடனடியாக அவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் உத்தமயாதவ் இறந்தார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.15 லட்சம் நஷ்ட ஈடு வழங்க கோரிக்கை: விபத்து குறித்து பரங்கிப்பேட்டை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தெரிவித்தது:- ஐஎல்எஃப்எஸ் தனியார் மின்உற்பத்தி நிறுவனத்திற்கு, புதுதில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. அதனையும் மீறி தொடர்ந்து கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சந்தித்து கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தோம். ஆனால் இந்நிலையில் தொடர்ந்து கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவதால், கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி கீழே விழுந்து இறந்துள்ளார். எனவே அவரது குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கட்டுமானப்பணிகளை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என எஸ்.ஜி.ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.