கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குவைத்தில் சித்ரவதைக்குள்ளாகி தவிக்கும் மகனை மீட்டுத்தரக்கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் தந்தை மனு!

கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாசலபதி (53). பரங்கிப்பேட்டையில் தபால்காரராக பணியாற்றி வருகிறார். இவரது ஒரே மகன்

News image
Updated On :19 ஜனவரி 2015, 2:52 pm

ஜி.சுந்தரராஜன்

குவைத் இந்திய தூதரகத்தில் தவிக்கும் மகனை மீட்டுத்தருமாறு அவரது தந்தை கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்  குறை தீர்க்கும் முகாமில் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாரிடம் மனு ஒன்று அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாசலபதி (53). பரங்கிப்பேட்டையில் தபால்காரராக பணியாற்றி வருகிறார். இவரது ஒரே மகன் கோகுல் (26), ஐடிஐ முடித்து விட்டு கடந்த ஆண்டு 24-4-2014 அன்று வீட்டு வேலைக்காக குவைத் நாட்டுக்கு சென்றார். ரூ.12 ஆயிரம் மாத சம்பளத்தில் அங்குள்ள ஷேக் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். 3 மாதத்திற்கு பின்னர் அவர் என்ன ஆனார் என தெரியவில்லை. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் பெற்றோருக்கு போனில் தொடர்பு கொண்ட கோகுல், தனது முதலாளி தினமும் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக கதறி அழுதுள்ளார். மேலும் அங்கிருந்து தப்பி இந்திய தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். தன்னைப்போலவே 100-க்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்துள்ளதாகவும், தனது பாஸ்போர்ட்டை முதலாளி பறித்துக்கொண்டதாகவும், ஊர் திரும்ப முடியாமல் தவிப்பதாகவும், இந்திய அரசின் மூலம் தன்னை மீட்குமாறும் கூறி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் மக்கள் குறைகேட்பு  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம், வெங்கடாசலபதி மனு அளித்தார். அதில் குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் தவிக்கும் தனது மகன் கோகுலை மீட்டுத்தருமாறும், தனது மனைவி உடல் நலக்குறைவால் அவதிப்படுவதாகவும், மீட்பு நடவடிக்கையை உடனே தொடங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்ததையடுத்து வெங்கடாசலபதி மற்றும் உறவினர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.