கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நாளை தை அமாவாசை: சிதம்பரம் தசதீர்த்தங்களில் ஸ்ரீநடராஜப் பெருமாள் தீர்த்தவாரி

ரிஷப வாகனத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப்பெருமான் (ஸ்ரீசந்திரசேரர்) நடராஜர் கோயிலிலிருந்து புறப்பட்டு நான்குவீதிகளில் வலம் வந்து முதல் தீர்த்தமான சிவகங்கையில் தீர்த்தவாரி

News image
Updated On :19 ஜனவரி 2015, 1:37 pm

ஜி.சுந்தரராஜன்

தை அமாவாசையை முன்னிட்டு சிதம்பரம் தச தீர்த்தங்களில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப்பெருமானின் தீர்த்தவாரி உத்சவம் நாளை (ஜன.20) செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

ரிஷப வாகனத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப்பெருமான் (ஸ்ரீசந்திரசேரர்) நடராஜர் கோயிலிலிருந்து புறப்பட்டு நான்குவீதிகளில் வலம் வந்து முதல் தீர்த்தமான சிவகங்கையில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. பின்னர் கிள்ளை குய்ய தீர்த்தம், புலிமடு தீர்த்தம் (அம்மாபேட்டை சக்திநகர்), வியாக்கிரபாத தீர்த்தம் (இளமையாக்கினார் கோயில் குளம்), அனந்த தீர்த்தம் (அனந்தீஸ்வரர் கோயில் குளம்), நாகசேரி தீர்த்தம், (நாகசேரி குளம்), பிரம்மதீர்த்தம் (சிங்காரத்தோப்பு), சிவப்பிரியை தீர்த்தம் (தில்லையம்மன்கோயில் குளம்), திருப்பாற்கடல் தீர்த்தம் (வேங்கான்தெரு, மாணிக்கவாசகர் பர்ணாசாலை), பரமானந்த கூடம் (ஸ்ரீநடராஜர் அபிஷேக தீர்த்த கிணறு) ஆகிய தீர்த்தங்களில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுதளை பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.