இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் மணல் திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது: நான்கு டிராக்டர்கள் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில், திங்கள்கிழமை மணல் திருட்டில் ஈடுபட்ட 4 டிராக்டர்களை பறிமுதல் செய்த போலீஸார் அதனை ஓட்டி வந்த டிரைவர்கள் நால்வரையும் கைது செய்தனர். இது

News image
Updated On :19 ஜனவரி 2015, 1:23 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில், திங்கள்கிழமை மணல் திருட்டில் ஈடுபட்ட 4 டிராக்டர்களை பறிமுதல் செய்த போலீஸார் அதனை ஓட்டி வந்த டிரைவர்கள் நால்வரையும் கைது செய்தனர். இது தொடர்பாக டிராக்டர் உரிமையாளர்கள் நால்வரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் சார்பு ஆய்வாளர் மோகன், திருவண்ணாமலை ஆராய்ச்சி ஓடை பகுதியில் மணல் திருட்டு தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அரசின் எந்த அனுமதியும் பெறாமல் ஓடையில் மணல் அள்ளிய நான்கு டிராக்டர்களை பிடித்து நகர் காவல் நிலையம் கொண்டு வந்தார். சார்பு ஆய்வாளர் மோகன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் டிராக்டர் ஓட்டுநர்கள் ரைட்டன்பட்டி கனி மகன் செல்வம் (26), பெருமாள்பட்டி கருப்பையா செட்டியார் மகன் பழனி (32), மேலத்தொட்டியபட்டி மாரியப்பன் மகன் பாமுல்ராஜ் (45), மங்காபுரம் தங்கப்பநாடார் மகன் பரமசிவம் (41) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள டிராக்டர் உரிமையாளர்கள் பெருமாள்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த சௌந்தரபாண்டி, குலாளர் தெருவைச் சேர்ந்த சீ.சேதுராமன், மங்காபுரம் ரா.மாரிக்கனி, பெருமாள்பட்டி சீ.சிவா ஆகியோரைத் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.