விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் செவ்வாய்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சற்று நேரம் ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 8 கூட்டுறவு நெசவாளர்கள் சங்கம் உள்ளன. இவர்களின் நெசவுக்கு கடந்த இரு மாதங்களாக நூல் வழங்கப்படவில்லையாம். மேலும் நெய்த துணிகளை அரசு கொள்முதல் செய்யாததால் பல லட்சக்கணக்காண ரூபாய் மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளதாம். இது குறித்து அலுவர்களிடம் பல முறையிட்டும் அரசுக்கு கோரிக்கை தெரிவிக்கப்படவில்லை என்று கூறி, செவ்வாய்கிழமை ஆர்.சி. தேவாலயத்திற்கு எதிரேயுள்ள 1601 ஸ்ரீவில்லிபுத்தூர் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாகியும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வராததால், அதிருப்தியடைந்த நெசவாளர்கள் நகர் காவல் நிலையம் அருகே நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் பற்றி அறிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் கே.முரளிதரன், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதனையடுத்து சங்க அலுவலகத்திற்கு உதவி இயக்குநர் பாண்டி வந்து பேசினார். அடுத்த வாரத்திற்குள் நெசவுக்கு நூல் தர ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். தேங்கியுள்ள துணிகளை கொள்முதல் செய்வது என்பது அரசு செய்ய வேண்டியது என்று விளக்கினார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் இப் பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

டி20 உலகக் கோப்பை! ஒரே நாளில் பல சாதனைகள் படைத்த ஃபின் ஆலன்!

தங்கம் விலை தொடா் சரிவு: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?

தமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல், ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் - 2007

மேட்டூர் அணை நிலவரம்!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

