இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விருதுநகர் மாவட்டத்தில் சிறு விடுப்பு போராட்டத்தில் கலந்து கொள்வதில்லை என அரசு பணியாளர்கள் சங்கம் முடிவு

விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பை ஒட்டி அரசும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ள போர்க்கால நடவடிக்கைகளில் தொய்வு ஏற்படாத வகையிலும் பொதுமக்களுக்கு சேவை செய்யும் நோக்கோடும் ஜனவரி 22-ம் தேதி அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்த உத்தேசித்துள்ள சிறு விடுப்பு போராட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் ஆகியவை கலந்து கொள்ளாது என்று அறிவித்துள்ளது.

News image
Updated On :21 ஜனவரி 2015, 5:31 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பை ஒட்டி அரசும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ள போர்க்கால நடவடிக்கைகளில் தொய்வு ஏற்படாத வகையிலும் பொதுமக்களுக்கு சேவை செய்யும் நோக்கோடும் ஜனவரி 22-ம் தேதி அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்த உத்தேசித்துள்ள சிறு விடுப்பு போராட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் ஆகியவை கலந்து கொள்ளாது என்று அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவரும், தமிழ்நாடு பேரூராட்சிப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவருமான ஆ.காமராஜ், புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக காலநிலை மாற்றம் மற்றும் கொசுக்களின் பெருக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பால் பொதுமக்கள் பெருமளவு வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். மாவட்ட நிர்வாகமும், அரசும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடிக்கிவிட்டு தற்போது நிலமையை கட்டுக்குள் வைத்துள்ளது. நோய்தடுப்பு நடவடிக்கைகளில் அரசுப் பணியாளர்கள் முழுவீச்சில் பங்கேற்றுள்ள இந்த நேரத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கம் ஒரு நாள் சிறு விடுப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் நோய் தடுப்புப் பணிகள் தொய்வின்றி நடைபெறவும், பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கும் வசதியாக 22-ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் போராட்டத்தில் இரு சங்கங்களும் கலந்து கொள்ளாது என காமராஜ் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.