கடன் தொல்லை தாங்கமுடியாத விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் தினந்தோறும் நடந்துவரும் நிலையில், விவசாயிகளை சந்தித்து மன தைரியம் கூறுவதற்காக கர்நாடகத்திற்குவருகைதர அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி திட்டமிட்டிருக்கிறார்.
கர்நாடகத்தில் மண்டியா, மைசூரு, பெலகாவி, பெல்லாரி,சிக்பளாப்பூர், கோலார் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், கடன் தொல்லை தாங்கமுடியாமல் தற்கொலை செய்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்து விவசாயிகளின் குறைகளை கேட்டுவரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, அவர்சார்ந்தகட்சி ஆளும் கர்நாடகத்திற்கு வருகைதந்து விவசாயிகளின் குறைகளை கேட்க தயங்குவது ஏன் என்று பாஜக, மஜத போன்ற எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிவருகின்றன.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை பொய்யாக்கும்வகையில், கர்நாடகத்திற்கு வருகைதந்து விவசாயிகளின் மன உறுதியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட ராகுல்காந்தி திட்டமிட்டிருக்கிறார். மேலும் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் திட்டமிட்டிருக்கிறார். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பி.கே.ஹரிபிரசாத் கூறியதாவது:
கர்நாடகத்தில் நடந்துவரும் விவசாயிகளின் தற்கொலைகள் ராகுல்காந்திக்கு மனவருத்ததை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கர்நாடகத்திற்கு வருகைதந்து விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிய ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார். இந்தவாரம் ராஜஸ்தான் சென்று அங்குள்ள விவசாயிகளை சந்திக்கவுள்ள ராகுல்காந்தி, அடுத்த வாரத்தில் கர்நாடகம் வரவாய்ப்பிருக்கிறது. ராகுல்காந்தியின் வருகைக்கான ஏற்பாடுகளில் கட்சித்தலைவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மோகன்லாலின் திரிஷ்யம் - 3 படத்தின் மேக்கிங் விடியோ!

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



