கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை கோயில் சுவரில் துளையிட்டு திருட்டு

திருநெல்வேலி நகரில் உள்ள இசக்கியம்மன் கோயில் சுவரை துளையிட்டு மர்ம நபர்கள் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள பித்தளை குத்துவிளக்குகளை திருடிச் சென்றனர்.

News image
Updated On :14 ஜூன் 2015, 10:31 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி நகரில் உள்ள இசக்கியம்மன் கோயில் சுவரை துளையிட்டு மர்ம நபர்கள் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள பித்தளை குத்துவிளக்குகளை திருடிச் சென்றனர்.

திருநெல்வேலி நகரம் நயினார்குளம் சாலையில் மாவு இசக்கியம்மன் கோயில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை பூசாரி வழக்கம்போல் கோயிலை திறந்தபோது, பின்பக்கச்  சுவரில் பெரிய அளவில் ஓட்டை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மர்ம நபர்கள் கோயில் சுவரையில் துளையிட்டு உள்ளே வந்து கோயிலில் இருந்த 4 பித்தளை குத்துவிளக்கு மற்றும் பூஜை பொருட்களை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. கோயில் உண்டியல் உடைத்து அதிலிருந்த பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். மொத்த மதிப்பு ரூ. 30 ஆயிரம்.

தகவலறிந்த திருநெல்வேலி நகரம் போலீஸார் கோயிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். விரல்ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. கோயில் நிர்வாகி ஆர். முருகன் அளித்தபுகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.