மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 6 அடியும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் மேலும் 7 அடியும் உயர்ந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த சில தினங்களாக நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 11 மி.மீ, ராமநதி அணையில் 6 மி.மீ, கருப்பாநதி அணையில் 38 மி.மீ, குண்டாறு அணையில் 2.1 மி.மீ, அடவிநயினார் அணையில் 13 மி.மீ, கொடுமுடியாறு அணையில் 17 மி.மீ, கன்னடியன் அணைக்கட்டில் 4 மி.மீ,
களக்காட்டில் 2 மி.மீ, தென்காசியில் 13 மி.மீ, ராதாபுரத்தில் 4 மி.மீ, செங்கோட்டையில் 2.2 மி.மீ மழையும் பெய்துள்ளது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 800.93 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 335 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 60 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 25 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 171 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 30 கனஅடியும், கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 146 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
அணைகளின் நீர்மட்டம் உயர்வு: நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மிதமான மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் 69.70 அடியாக இருந்தது. அணையிலிருந்து பாசனம், குடிநீர் தேவைக்கு 1,204.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 73.98 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 82.40 அடியாகவும் இருந்தது. மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசனத்திற்கு 75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் மேலும் 7 அடி உயர்ந்து 29 அடியாகவும், கடனாநதி அணை நீர்மட்டம் 54 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 46 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 50.20 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 15.74 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்ந்து 50 அடியாகவும், வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 27 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.63 அடியாகவும் இருந்தது.