கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடிப்பு: அடவிநயினார், கொடுமுடியாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அடவிநயினார், கொடுமுடியாறு, கருப்பாநதி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

News image
Updated On :24 ஜூன் 2015, 12:40 pm

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அடவிநயினார், கொடுமுடியாறு, கருப்பாநதி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. புதன்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 34 மி.மீ, பாபநாசம் கீழ் அணையில் 13 மி.மீ, சேர்வலாறு அணையில் 7 மி.மீ, கடனாநதி அணையில் 1 மி.மீ, கருப்பாநதி அணையில் 12 மி.மீ, குண்டாறு அணையில் 6 மி.மீ, அடவிநயினார் அணையில் 9 மி.மீ, கொடுமுடியாறு அணையில் 25 மி.மீ, செங்கோட்டையில் 4.1 மி.மீ, தென்காசியில் 7 மி.மீ மழையும் பெய்துள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு:

 நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து உள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,222.11 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து குடிநீர், பாசனத் தேவைக்கு 1,204.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 134 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து பாசனத்திற்கு பெருங்கால் மதகில் 75 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 73.98 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 55 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 46 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 3.61 அடி உயர்ந்து 53.81 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 16.07 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 54 அடியாகவும், வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 27 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.63 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் மேலும் 5 அடி உயர்ந்து 34 அடியாகவும் இருந்தது.

கடனாநதி அணைக்கு விநாடிக்கு 106 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 124 கனஅடியும், கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 144 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. கடனாநதி அணையிலிருந்து பாசனத்திற்கு 60 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.