கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நடராஜர் தேவசபைக்கு மாற்றம் குறித்து தேவபிரசன்னம் பார்க்க வேண்டும்: சு.கைலாசசங்கர தீட்சிதர்

இதய ஸ்தானமான சித்சபையிலிருந்து, தேவசபைக்கு மாற்றுவது குறித்து உலக நன்மை கருதி அஷ்டமங்கள தேவபிரசன்னம் பார்த்துவிட்டு பாலாலயம் செய்ய வேண்டும் என பொதுதீட்சிதர்களில்

News image
Updated On :1 மார்ச் 2015, 1:06 pm

ஜி.சுந்தரராஜன்

இதய ஸ்தானமான சித்சபையிலிருந்து, தேவசபைக்கு மாற்றுவது குறித்து உலக நன்மை கருதி அஷ்டமங்கள தேவபிரசன்னம் பார்த்துவிட்டு பாலாலயம் செய்ய வேண்டும் என பொதுதீட்சிதர்களில் ஒருவரான சு.கைலாசசங்கர தீட்சிதர் தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் திருப்பணி கமிட்டி அமைக்க வேண்டும் என ஆர்.யு.கனகசபை தீட்சிதர் பொதுதீட்சிதர்களின் கமிட்டியினரிடம் மனு கொடுத்தார். மனு மீது திருப்பணி எதுவும் நடைபெறவில்லை. வெறும் வர்ணம் மட்டும் பூசப்படுகிறது என கமிட்டியினர் தெரிவித்தனர்.

ஆனால் தற்போது பாலாலயம் என்ற பெயரில் ஸ்ரீநடராஜமூர்த்தியை இதுவரை வரலாறு காணாத விதமான வரையில் இதய ஸ்தானமான சித்சபையை விட்டு இரண்டு மாத காலத்திற்கு தேவசபையில் வைத்து பூஜையை மாற்ற உள்ளது. இத்தனை காலமாக செய்து வந்த பூஜை முறையை மாற்றி செய்வதால் ஏற்படும் தீமைகளுக்கு யார் பொறுப்பு ஏற்பது.

நாம் அனைவரும் சுட்டிக்காட்டி வாழ்ந்து வருகிற சிதம்பரம் ரகசியத்தை பாலாலயம் செய்தால், அவற்றின் ஸ்தானத்திற்கு யார் பூஜை செய்வது, இந்த செயல் சாஸ்திரத்திற்கு வினோதமானது. வாழ்வாதாரம் பாதிப்படையும். சித்சபையில் இரண்டு மாதத்தில் மிகப்பெரிய தவறு ஒன்று நடக்கப் போவதாக கேள்விபட்டேன். எனவே உலக நன்மை கருதி, கோயில் நன்மை கருதி அஷ்டமங்கள் தேவபிரசன்னம் பார்த்துவிட்டு பாலாயம் செய்ய வேண்டும் என கோயில் பொதுதீட்சிதர்களிடம் மனு அளித்துள்ளேன் என சு.கைலாச சங்கர தீட்சிதர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.