இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து மாணவர் தப்பி ஓட்டம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் தங்கி படிக்க, குழந்தைகள் நலக் குழு ஆணையத்தால் அனுப்பி வைக்கப்பட்ட மாணவர் இங்கிருந்து தப்பி

News image
Updated On :7 மார்ச் 2015, 11:54 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் தங்கி படிக்க, குழந்தைகள் நலக் குழு ஆணையத்தால் அனுப்பி வைக்கப்பட்ட மாணவர் இங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகிறார்கள்.

மதுரை மாவட்டம், செக்கானூரணி, பூஞ்சம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் பாண்டி மகன் சரவணன் (15). இவர் குற்றச் செயலில் ஈடுபட்டதால், மதுரை குழந்தைகள் நலக்குழு ஆணையம், இவர் 18 வயது பூர்த்தியடையும் வரை, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்-மல்லிபுத்தூரில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்கி படிக்க உத்தரவிட்டது. இதன்படி 19.2.15-ம் தேதி இவர் இங்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளி கண்காணிப்பாளர் தனசேகரபாண்டியன் மல்லி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சரவணனை தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.