இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பேருந்து-லாரி மோதல்: இரு குழந்தைகள் உள்ளிட்ட மூவர் சாவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் எல்லைக்குள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அதிவேகமாக வந்த அரசு பேருந்து மற்றும் லாரி மோதிக் கொண்டதில் இரு குழந்தைகள் உள்ளிட்ட மூவர் சம்பவ

News image
Updated On :8 மார்ச் 2015, 10:23 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் எல்லைக்குள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அதிவேகமாக வந்த அரசு பேருந்து மற்றும் லாரி மோதிக் கொண்டதில் இரு குழந்தைகள் உள்ளிட்ட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அடிக்கடி விபத்து நடக்கும் இந்த இடத்தில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த இப் பகுதி மக்கள் மற்றும் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகர்கோவிலில் இருந்து குமுளி நோக்கி அரசு போக்குவரத்துக் கழக பேருந்து வந்து கொண்டிருந்தது. எதிர் திசையில் திருச்சியிலிருந்து சிமென்ட் லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்றி கேரளா மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி எல்லைக்குள், ஜி.எம்.நகர் மங்காபுரம் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தின் அருகே அதிவேகமாக வந்த அரசு பேருந்து மற்றும் லாரி மோதிக் கொண்டது. இதில் பேருந்தில் பயணம் செய்த நெல்லை மாவட்டம், வி.கே.புதூர், ஊத்துமலை காளிச்சாமி மகள் கங்கா (12), வண்டிபெரியார் எஸ்டேட்டைச் சேர்ந்த தம்பி (70), மூணாறு-மாட்டுப்பட்டி எஸ்ட்டேட்டைச் சேர்ந்த முனீஸ்வரபாண்டி மகன் சஞ்சய் (8) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். சஞ்சயின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்டார். தாய் விஜயலட்சுமியுடன் இவர் பயணம் செய்துள்ளார். அடுத்த சில நாட்களில் வரும் பிறந்தநாளுக்கு பெரிய கேக் செய்ய வேண்டும் என்று சஞ்சய் கூறியதாக தாய் கூறி அழுதது பெரும் சோகமாக இருந்தது.

காயமுற்றோர்: வி.கே.புதூர் ஊத்துமலை காளிச்சாமி, உத்தமபாளையம் பா.ரமேஷ் (27), ராஜபாளையம் ராஜாகோட்டை தெரு பா.ராஜலட்சுமி (40), திருநெல்வேலி பேட்டை தியாகராஜன் (74), சங்கரன்கோவில் இந்திரா காலனியைச் சேர்ந்த பழனியம்மாள் (47), உத்தமபாளையம் ஆனைமலையன்பட்டி மு.விஜயா (31), வண்டிப்பெரியார் பா.மணிமாறன் (55), சங்கரன்கோவில் நாயக்கர்பட்டி செ.மதுகுமார் (18), தளவாய்புரம் புனல்வேலி பாலகிருஷ்ணன் (49) ஆகியோர் பலத்த காயமுற்று மதுரை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்து நடைபெற்ற இடத்தினை ஒட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியின் அலுவலகம் உள்ளது. சம்பவம் நடைபெற்றபோது அங்கிருந்த அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஈடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவனையில்  அனுமதித்து உடனடி சிகிச்சைக்கைக்கு நடவடிக்கை எடுத்தார். பின்னர் அவர் கூறுகையில், இதே இடத்தில் வாரத்திற்கு இரு விபத்துக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நகர் எல்லைக்குள் வாகனங்கள் அதிவேகமாக வருகின்றன. மேலும் இந்த இடத்தில் சாலை வளைவில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என்றார்.

இச் சம்பவம் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் கன்னியாகுமரியைச் சேர்ந்த சு.மணிகண்டன் (45) கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.