ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

ஸ்ரீவைகுண்டம் அருகே அதிமுக கிளை செயலர் வெட்டிக்கொலை: மீண்டும் பதட்டம்

ஸ்ரீவைகுண்டம் அருகே அதிமுக கிளை செயலர் மர்ம கும்பலால் செவ்வாய்க்கிழமை காலை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :10 மார்ச் 2015, 7:58 am

ஸ்ரீவைகுண்டம் அருகே அதிமுக கிளை செயலர் மர்ம கும்பலால் செவ்வாய்க்கிழமை காலை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதையொட்டி காமராஜர் சிலை, 20க்கும் மேற்பட்ட வீடுகள், கார், பைக்களை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சியைச் சேர்ந்தவர் வீரபாண்டி மகன் சுப்பையா (57). இவர் அதே பகுதி அதிமுக கிளை செயலராக இருந்து வந்தார். மேலும் அப்பகுதியில் கொடுங்கல், வாங்கல் தொழில் நடத்தி வந்தாராம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை  காலை அங்கு  பணம் கொடுத்தவர்களிடம் பணம் வசூல் செய்ய வந்தாராம். அப்போது அங்கு மறைந்து இருந்த மர்ம கும்பல் அவரை மறித்து அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சுப்பையா சம்பவ இடத்திலேயே இறந்தார். உடன் அந்த கும்பல் தலைமறைவானது. இதை அறிந்த சுப்பையாவின் உறவினர்கள் அங்கிருந்த காமராஜர் சிலை, மற்றும்  ஒரு சமுகத்தினரின் 20 மேற்பட்ட வீடுகளை அடித்த நொறுக்கினர். மேலும் 1 கார் மற்றும் சில பைக்குகளும் அடித்து சேதப்படுத்தப்பட்டனர். தகவல் கிடைத்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து சுபபையாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை ஏடிஎஸ்பி முரளிரம்பா பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கடந்த மாதம் 22ஆம்தேதி புதிய தமிழகம் கட்சி நகர செயலர் பாஸ்கரன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு பதட்டம் நிலவியது. இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் வட்டம் பகுதியில் மார்ச் 9ஆம்தேதி வரை 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டது. அங்குள்ள மக்கள் கோரிக்கையை ஏற்றி அப்பகுதியில் மாவட்ட எஸ்.பி, துரை புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. 144 தடை உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டது இந்நிலையில் வல்லநாடு தென்னை வித்து பண்ணை காவலாளி துரைப்பாண்டியன் சனிக்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இதை தடுக்க ஏடிஎம் காவலாளி உலகநாதன் வெட்டப்பட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். யாரென தெரியவில்லை. இந்நிலையில் கொங்கராயகுறிச்சியில் அதிமுக நகர செயலர் சுப்பையா மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தொடர் கொலைகளால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.