இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இரு மோட்டார் வாகன விபத்து வழக்குகள்: ரூ.35.13 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை

இரு மோட்டார் வாகன விபத்தில், உயிரிழந்தவர்களின் வாரிசுதாரருக்கு ரூ.35.13 லட்சம் இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை

News image
Updated On :12 மார்ச் 2015, 3:11 pm

கோ.ஜெயக்குமார்

இரு மோட்டார் வாகன விபத்தில், உயிரிழந்தவர்களின் வாரிசுதாரருக்கு ரூ.35.13 லட்சம் இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர், டி.மானகசேரியைச் சேர்ந்தவர் குருசாமி (26). இவரது மனைவி பரமேஸ்வரி (23). இவர்களுக்கு சுந்தரமூர்த்தி என்ற 4 வயது மகன் உண்டு. குருசாமி கட்டட ஒப்பந்தாரராக இருந்தார். 28.6.2010-ம் தேதி திருநெல்வேலி-கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சி இந்திரா காலனி அருகே குருசாமி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, வேன் மோதியதில் உயிரிழந்தார்.இதனையடுத்து இவரது மனைவி பரமேஸ்வரி உள்ளிட்ட வாரிசுதாரர்கள் இழப்பீடு கோரி, ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கோவிந்தராஜ், விருதுநகர் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம், வாரிசுதாரருக்கு ரூ.7.97 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

மற்றொரு வழக்கு:

ஸ்ரீவில்லிபுத்தூர், பெருமாள்பட்டி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (30). இவரது மனைவி ஹேமலதா (26). இவர்களுக்கு பாலஹரிசெல்வம் என்ற 1 வயது மகன் உண்டு. செல்வராஜ் வனத்துறையில் ஒப்பந்ததாரராக இருந்தார். 15.2.2008-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் சாமிநத்தம் அருகே இரு சக்கர வாகனத்தில் செல்வராஜ் சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் பேருந்து இரு சக்ககர வாகனத்தின் மீது மோதியதில் செல்வராஜ் உயிரிழந்தார்.

மனைவி ஹேமலதா மற்றும் வாரிசுதாரர் இழப்பீடு கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கோவிந்தராஜ், விருநகர் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் செல்வராஜின் வாரிசுதாரருக்கு ரூ.27.16 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.