கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆதார் அட்டை கணக்கெடுப்பதாக கூறி, சிதம்பரத்தில் வீடுபுகுந்து 14 பவுன் நகைகள் திருட்டு

ஆதார் அட்டைக்கு கணக்கெடுப்பதாக கூறி மர்மநபர்கள் சிதம்பரத்தில் வீடுபுகுந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 14 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.

News image
Updated On :13 மார்ச் 2015, 3:11 pm

ஜி.சுந்தரராஜன்

ஆதார் அட்டைக்கு கணக்கெடுப்பதாக கூறி மர்மநபர்கள் சிதம்பரத்தில் வீடுபுகுந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 14 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் விளங்கியம்மன்கோயில்தெருவைச் சேர்ந்த சவிதா (38). இவரது கணவர் ரவிச்சந்திரன் இறந்துவிட்டதால், தாயாருடன் தனியாக வசித்து வருகிறார். கவரிங் நகை தொழில் செய்யும் இவர் புதன்கிழமை பிற்பகல் மருந்துவாங்க கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த தாயார் சரோஜாவிடம் (70) மர்மநபர் ஒருவர் ஆதார் அட்டை கணக்கெடுக்க வந்துள்ளதாக கூறி ரேஷன் கார்டு கேட்டு, தாயாரை மாடிக்கு அழைத்துச் சென்று செல்போனில் பேசிக் கொண்டிருந்துவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் தாயார் சரோஜா கீழே வந்து பார்த்த போது அப்போது மற்றொரு மர்மநபர் வீட்டிற்குள் புகுந்து கீழ் அறையிலிருந்து 14 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளது தெரியவந்து அதிர்ச்சியுற்றார்.

இதுகுறித்து சவிதா கொடுத்த புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.