ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

விராலிமலையில் கார் மோதி விவசாயி சாவு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை- திருச்சி நான்கு வழிச்சாலையில் சனிக்கிழமை இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.

News image
Updated On :2 மே 2015, 3:08 pm

சி. உதயகுமார்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை- திருச்சி நான்கு வழிச்சாலையில் சனிக்கிழமை இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.

விராலிமலை அருகே உள்ள இ. மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ர. கருப்பண்ணன்(58) விவசாய வேலை செய்து வரும் இவர் சனிக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் விராலிமலை- திருச்சி நான்கு வழிச்சாலை வழியாக விராலிமலை வந்து கொண்டிருந்தார். விராலிமலை கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு அருகே வந்த போது, பின்னால் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார்(இநோவா) இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது, இதில் தலையில் பலத்த காயமடைந்த கருப்பண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை காவல் ஆய்வாளர் அ. மா. செந்தில்மாறன் கார் ஓட்டுநர் திருச்சியைச் சேர்ந்த கு. துரைபாபுவை (41) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.