இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஒருவரை காரில் கடத்தி மிரட்டிய வழக்கு: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒருவரை காரில் கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தி, வெற்று காசோலைகளில் கையொப்பம் பெற்ற வழக்கில் அரசுப் பள்ளி தலைமை

News image
Updated On :3 மே 2015, 3:05 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒருவரை காரில் கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தி, வெற்று காசோலைகளில் கையொப்பம் பெற்ற வழக்கில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை, அரசு போக்குவரத்துக் கழக நடத்துனர் உள்ளிட்ட 5 பேர் மீது ஞாயிற்றுக்கிழமை போலீஸார் வழக்குப் பதிவு செய்து இவர்களைத் தேடி வருகிறார்கள்.

ராஜபாளையம், ஆவாரம்பட்டி, அழகுதேவன்குளம் சாலையைச் சேர்ந்தவர் கி.மணிகண்டன். இவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு பிளவக்கல் அணைப் பகுதியில் உள்ளது. ராஜபாளையம், ஸ்ரீரெங்கபாளையம், முத்துமாரி என்பவரின் மனைவி தமிழ்செல்வி (42). இவர் கொருக்கம்பட்டி அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். தோப்புக்குச் செல்லும் போது, மணிகண்டனுக்கு, தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வியுடன் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்செல்வியின் கணவர் விபத்தில் உயிரிழந்துவிட்டாராம். தமிழ்செல்வி கேட்டுக்கொண்டதின் பேரில், கணவர் இறந்தது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மணிகண்டன் பெற்றுக் கொடுத்துள்ளார்.மணிகண்டன்-தமிழ்செல்வி இடையே திடீரென ஏற்பட்ட மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. 31.1.15-ம் தேதி தோப்பில் மணிகண்டன் இருந்துள்ளார். அங்கு தலைமை ஆசிரியை தமிழ்செல்வி, கு.ஜீவானந்தம் (38), செ.சேகர் (48), ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைப் பேருந்தில் நடத்துனராக வேலை செய்யும் க.அலெக்ஸாண்டர் (51), டே.ஜோசப் மோகன்குமார் (எ) மனோபிரபு ஆகியோர் காரில் வந்துள்ளார்கள்.

காரில் மணிகண்டனை கடத்திச் சென்று அமச்சியார்புரம் காலனியில் உள்ள தலைமை ஆசிரியை தமிழ்செல்வியின் வீட்டில் வைத்து, ரூ.10 லட்சம் தர வேண்டும் என்று கூறி அடித்துள்ளார்கள். மணிகண்டன் பயந்துபோய், ராஜபாளையம் ஆந்திர வங்கிக் கிளையின் 4 நிரப்பப்படாத காசோலைகளில் கையொப்பமிட்டுக் கொடுத்துள்ளார். மேலும் 5 வெற்றுப் பத்திரங்களில் கையொப்பம் வாங்கியுள்ளார்கள். இதனை வெளியே சொன்னால் அடித்துக் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்களாம்.

இது குறித்து மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் மணிகண்டன் புகார் செய்தார். நீதிமன்றம் தலைமை ஆசிரியை உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது. இதன் பேரில் கூமாப்பட்டி போலீஸார் தலைமை ஆசிரியை தமிழ்செல்வி, கு.ஜீவானந்தம், செ.சேகர், க.அலெக்ஸாண்டர், டே.ஜோசப் மோகன்குமார் (எ) மனோபிரபு ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து இவர்களைத் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.