இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சாதியைக் கூறி இழிவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாதியைக் கூறி ஒருவரை இழிவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது ஞாயிற்றுக்கிழமை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

News image
Updated On :3 மே 2015, 3:18 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாதியைக் கூறி ஒருவரை இழிவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது ஞாயிற்றுக்கிழமை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர், ஆதிதிராவிடர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் பு.பிள்ளையார் (56). இவருக்கு சேதுநாராயணபுரம் ஊருக்கு கிழக்கே விவசாய காடு உள்ளது. இக் காட்டின் அருகே வத்திராயிருப்பு, அக்ரஹாரம் முதல் தெருவைச் சேர்ந்த சி.விஸ்வநாதன் என்பவரின் காடு உள்ளது. இரு காடுகளுக்குமிடையே நடைபாதை உள்ளது. இந்தப் பாதையை பிள்ளையார் பயன்படுத்தக்கூடாது என்று விஸ்வநாதன் கடந்த இரு ஆண்டுகளாக தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் சனிக்கிழமை பிள்ளையார் தனது காட்டில் பாகற்காய் பிடுங்கிக் கொண்டு குறிப்பிட்ட நடைபாதை வழியே வந்துள்ளார். அப்போது விஸ்வநாதன் காட்டின் வேலை செய்து கொண்டிருந்த பகவதி என்பவர் வந்து, இப் பாதை வழியே வரக்கூடாது என்று கூறியுள்ளார். அதற்கு பிள்ளையார், உனது முதலாளியை வரச்சொல் என்று கூறியுள்ளார். அப்போது அங்கு வந்த விஸ்வநாதன், பிள்ளையாரை சாதியைக் கூறி ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் பிள்ளையார் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் கே.முரளிதரன் விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.