இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நேபாள நில நடுக்கம்: அரசுப் பணியாளர் சங்கம் ஒரு நாள் ஊதியம் அளிக்க முடிவு

நேபாள நாட்டில் ஏற்பட்ட கடுமையான நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பேரூராட்சி பணியார் சங்கத்தில் உள்ள

News image
Updated On :3 மே 2015, 9:37 am

கோ.ஜெயக்குமார்

நேபாள நாட்டில் ஏற்பட்ட கடுமையான நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பேரூராட்சி பணியார் சங்கத்தில் உள்ள பணியாளர்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மாநிலத் தலைவர் எட்வர்டு ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவரும், பேரூராட்சி பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவருமான ஆ.காமராஜ் முன்னிலை வகித்தார்.பேரூராட்சி பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் அன்பழகன் வரவேற்றார்.

கூட்டத்தில் நேபாள நாட்டில் ஏற்பட்டுள்ள நிலநடுக்க பாதிப்புகள் குறித்து உறுப்பினர்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்தனர். மேலும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.பின்னர் நேபாள நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த பெரும் இழப்பிற்கு, இந்திய அரசு செய்து வரும் உதவிக்கு சங்கத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நேபாள நிவாரணப் பணிக்காக சங்கங்களின் உறுப்பினர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை, பிரதமரின் நிவாரண நிதிக்கு அனுப்புவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்க மாநில துணைத் தலைவராக பொறுப்பு வகித்து, பணி நிறைவு பெற்றுள்ள ராஜேந்திர சோழனை பாராட்டி, சங்கத்தின் துணைத் தலைவர் சந்திரசேகர் வாழ்த்துரை வழங்கினார்.

பேரூராட்சி பணியாளர்கள் சங்க மாவட்ட பொருளாளர் பிலிப் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.