இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் 97.43 சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவ மாணவியரில் 97.43 சதவீதம்..

News image
Updated On :7 மே 2015, 9:14 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவ மாணவியரில் 97.43 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை விட 1.93 சதவீதம் அதிகமாகும்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் சர்வேஸ்வரன், வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 7291 மாணவ மாணவியர் எழுதினர். இவர்களில் 7104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.43 சதவீதமாகும். கடந்த ஆண்டு 95.50 சதவீதம் மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட அளவில் ராஜபாளையம், சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர் எம்.பிரபு வைரவேல் 1174 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.அருண் 1170 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார். ராஜபாளையம் சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவி ஆர்.கிருபாளினி, எஸ்.சரவணகணேஷ் ஆகியோர் 1168 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளனர் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.