இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மண் திருட்டை தட்டிக் கேட்டவருக்கு கொலை மிரட்டல்: 6 பேர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூரில் மண் திருட்டைத் தட்டிக் கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 6 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

News image
Updated On :9 மே 2015, 1:36 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மண் திருட்டைத் தட்டிக் கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 6 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள மம்சாபுரம், கீழூர் புதுகாலனியைச் சேர்ந்தவர் பொ.மகாலிங்கம் (52). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் சிங்கம்மாள்புரம் கிராமம் குட்டதட்டியில் ஆண்டாள் கோவிலுக்குச் சொந்தமான 12 ஏக்கர் 99 சென்ட் நிலத்தை 15.2.10-ம் தேதி ஏலம் எடுத்து அனுபவித்து வருகிறார். இக்காட்டில் 6 ஏக்கர் அளவில் இருந்த மண், மணல் ஆகியவற்றை கடந்த 5 ஆண்டுகளாக கோட்டைப்பட்டியைச் சேர்ந்த வீரையா, தங்கராஜ், ஆறுமுகம், வைரமுத்து, முத்துக்குமார், ராஜாசிங் ஆகியோர் தோண்டி கடத்தி வந்துள்ளார்கள்.

இதனால், விவசாயம் செய்ய முடியாமல், மகாலிங்கத்தின் நிலம் பாதிப்படைந்துள்ளது. சனிக்கிழமை குறிப்பிட்ட இடத்தில் மண் அள்ளிக் கொண்டிருந்த இவர்களிடம் மகாலிங்கம் சென்று, சப்தம் போட்டுள்ளார். அப்போது அவர்கள் மகாலிங்கத்தை ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தார்களாம்.

இது குறித்து மம்சாபுரம் காவல் நிலையத்தில் மகாலிங்கம் புகார் செய்தார். போலீஸார் குறிப்பிட்ட 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.