இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஜெயலலிலாத விடுதலை: ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுகவினர் கொண்டாட்டம்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிலாதா, மேல் முறையீட்டு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக வினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

News image
Updated On :11 மே 2015, 10:23 am

கோ.ஜெயக்குமார்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிலாதா, மேல் முறையீட்டு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக வினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, ஒன்றியக் குழுத் தலைவர் கி.காளிமுத்து, நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ் ஆகியோர் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் பேருந்து நிலையம் முன்பு திரண்டனர். ஜெயலலிதா வருமானத்திற்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், அவரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. இதனை்க் கொண்டாடும் வகையில் பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை தெரிவித்து, இனிப்புகள் வழங்கினர்.

பின்னர் நகரின் 33 வார்டுகளுக்கும் சென்று, அங்கும் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியைக் கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் தொகுதிச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், மாவட்ட ஜெயலலிதா பேரவை அவைத் தலைவர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், 33-வது வார்டு கிளைச் செயலாளர் க.வீராச்சாமி, வழக்குரைஞர்கள் மங்களசாமி, சௌந்தரராஜன், முருகன், ஜெகதீசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.