ராகுலின் தொலைபேசி அழைப்பு! மு.க. ஸ்டாலின் விளக்கம்கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு எப்படியிருக்கிறார்? தகவல் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு!திருவண்ணாமலை கார்த்திகை தீபம்! இலவச தரிசன டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!என்கவுன்டர் செய்யப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி லத்தீஃப் பட் யார்? அதிரவைக்கும் பின்னணிவேலைகளில் மட்டுமல்ல... தேர்வுகளிலும் மூக்கை நுழைக்கும் ஏஐ! ஸ்மார்ட் கண்ணாடி மூலம் மோசடி!தமிழ்நாட்டில் நாளை கனமழை பெய்யாது! மஞ்சள் எச்சரிக்கை வாபஸ்!அரக்கோணம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட நலத் திட்டங்களைத் தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்பொங்கல் ரிடர்ன்! முடிந்தது ரயில் டிக்கெட் முன்பதிவு!உலக பாரம்பரிய வாரம்: மாமல்லபுரத்தில் நாளை (நவ. 19) இலவச அனுமதி!ஜம்மு - காஷ்மீர் மசூதிக்குள் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா தளபதி என்கவுன்டர்!வ.உ.சி.யின் கொள்கைகளைப் பின்பற்றி முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்! முதல்வர் விஜய்!செம்மஞ்சேரியில் ஒலிம்பிக் சிட்டி அமைக்க டெண்டர் வெளியீடு!தீவிரப் புயலாக வலுப்பெற்றது அக்வான்!ஜம்மு-காஷ்மீரில் மோதல்! லஷ்கர்-இ-தொய்பா தளபதியை சுற்றிவளைத்த இந்திய ராணுவம்!தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் 13-ல் தேதி முதல் நவராத்திரி விழா 

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் 13-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

Updated On :

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் 13-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சிறப்பு பூஜைகளும், தினந்தோறும் மாலை 6.50 மணி முதல் 8.15 மணி வரை இசைக் கச்சேரி, நாட்டிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் நோட்டு, புத்தகங்களை  கோயி்லில் பூஜையில் வைத்து வழிபட 20-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் கட்டி எடுத்து வரவேண்டும்.23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விஜயதசமி (வித்யாரம்பம்) விழா நடைபெறுகிறது

காலை கணபதி ஹோமம், காலை பூஜைகள் முடிந்தவுடன் காலை 7 மணிக்கு சரஸ்வதி பூஜை நடைபெறும்.இதைத் தொடர்ந்து பகல் 11 மணி வரை நடைபெறும் வித்யரம்பத்தில் குழந்தைகளின் நாவில் தங்க மோதிரத்தால் ஓம் என்கிற முதல் அக்ஷரத்தை நம்பூதிரிகள் எழுதி விரல்களைப் பற்றி அரிசியில்  (ஹரி ஸ்ரீ கணபதயே நமஹ) எழுத்துக்களை எழுதி பயிற்றுவிப்பார்கள்.

இந்த விழாவில் பங்கேற்ற வரும் பெற்றோர் தட்டு கொண்டு வர வேண்டும் கோயிலின் சார்பில் இலவசமாகக் கரும்பலகை, எழுதுகோல், அ,ஆ,இ.ஈ எழுத்துக்கள் அடங்கிய எண்கள் அடங்கிய அக்ஷர அட்டை வழங்கப்படும்.

பின்னர் ஏற்கனவே பூஜையில் வைத்து வழிபட்ட நோட்டு புத்தகங்கள் மாணவர்களிடம் வழங்கப்படும்.வித்யாரம்பத்தில் பங்கேற்க பெற்றோர்கள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு மேலும் தகவல்களுக்கு 044-28171197, 2817, 2197 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கோயில் நிர்வாக அதிகாரி அனிஷ் குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.