விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ரயிலில் அடிபட்டு பூ விற்பனை செய்யும் பெண் சாவு

சிதம்பரம் அருகே ரயிலில் அடிபட்டு பூ விற்பனை செய்யும் பெண் ஒருவர் இறந்தார்.

News image
Updated On :1 ஏப்ரல் 2016, 1:33 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே ரயிலில் அடிபட்டு பூ விற்பனை செய்யும் பெண் ஒருவர் இறந்தார்.

சிதம்பரம் அருகே உள்ள கீழ்அனுவம்பட்டைச் சேர்ந்த மணிவேல் மனைவி புஷ்பா (35). இவர் சிதம்பரம் கடலூர் நெடுஞ்சாலையில் உள்ள ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டில் பூ விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் இன்று மாலை அப்பகுதி வழியே ரோந்து வந்த போலீஸாரை கண்டு பூ விற்பனை செய்த பெண்கள் ஓடினர். அச்சமயம் ரயில்வே கேட்டை கடந்த பெங்களூர் - காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் புஷ்பா அடிபட்டு இறந்து போனார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிதம்பரம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.