இந்த நிலையில் சுங்கக்கட்டணம் கடந்த ஏப்ரல், 1 ஆம் தேதி(1.04.2016) முதல் திருத்தி அமைக்கப்பட்டு உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கார், வேன், ஜீப் ஆகிய வாகனங்களுக்கு ஒரு முறைக்கு வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.65 தற்போது ரூ.5 உயர்த்தப்பட்டு ரூ.70 எனவும், இலகு ரக வாகனங்களுக்கு இரு முறைக்கு(ரிட்டர்ன்) ரூ.160 என்ற கட்டணம் தற்போது ரூ. 5 உயர்த்தப்பட்டு ரூ.165 ஆகவும், பேருந்து கட்டணம் ஒரு முறைக்கு ரூ. 225 கட்டணம் தற்போது ரூ. 5 உயர்த்தப்பட்டு ரூ. 230 எனவும், இருமுறை கட்டணம் ரூ. 340 தற்போது ரூ. 5 உயர்த்தப்பட்டு ரூ. 345 எனவும், லாரி ஒருமுறைக்கு ரூ. 245 தற்போது ரூ. 5 உயர்த்தப்பட்டு ரூ. 250 எனவும், இருமுறை கட்டணம் ரூ. 370 தற்போது ரூ. 10 உயர்த்தப்பட்டு ரூ. 380 எனவும், டாரஸ் ஒரு முறைக்கு ரூ. 355 தற்போது ரூ. 5 உயர்த்தப்பட்டு ரூ. 360 எனவும், இரு முறைக்கு ரூ. 535 தற்போது ரூ. 10 உயர்தப்பட்டு ரூ. 545 என கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டு உயர்த்தப்பட்டுள்ளது.