முன்ளாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும்: அரசுப் பணியாளர்கள் சங்கம் தீர்மானம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு மத்திய அரசு பாரதரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு மத்திய அரசு பாரதரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்டத் தலைவர் ஆ.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் செல்ல மாரியப்பன் முன்னிலை வகித்தார். பொருளாளர் த.பிலிப் வரவேற்றார்.
கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவிற்கு இரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் தலைவர் காமராஜர் தீர்மானம் கொண்டு வந்தார். தமிழக மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்று, சிறந்த ஆட்சி நிர்வாகம் செய்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மத்திய அரசு பாரதரத்தினா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும். புதியதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் நிர்வாக ரீதியாக அரசுப் பணியாளர்கள் முழு ஒத்துழைப்பு கொடு்த்து அனைத்து நலத்திட்டப் பணிகளும் மக்களை சென்றடையும் வகையில் செயல்படுவது என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு பேரூராட்சிப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மாரியப்பன், பொருளாளர் வி.குருசாமி உள்ளிட்டோர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உரையாற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...