ஆம்னி பேருந்தில் மின் கசிவு: தீப்பற்றி பேருந்து நாசம்: அதிர்ஷடவசமாக 16 பேர் உயிர் தப்பினர்
பேருந்து முற்றிலும் எரிந்து நாசமான நிலையில் சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு தீயணைப்புப் படையினர் வந்து தீயை அணைத்துள்ளனர்.


சென்னை கோயம்பேட்டிலிருந்து ராஜபாளையத்திற்கு திங்கள்கிழமை இரவு 7.40 க்கு இரு பெண்கள் உள்ளிட்ட 14 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து புறப்பட்டது. இதில் ஓட்டுநர்களாக திருநெல்வேலி மாவட்டம், டி.ராமநாதபுரத்தைச் சேர்ந்த தி.கோவிந்தகுமார் (29) மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஏ.ராமலிங்காபுரத்தைச் சேர்ந்த ஆ.தட்சணாமூர்த்தி (54) ஆகியோர் இருந்துள்ளனர்.
பேருந்து திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 6 மணியளவில் கிருஷ்ணன்கோவிலை அடுத்துள்ள அழகாபுரி விலக்கு அருகே வந்து கொண்டிருந்துள்ளது. சிலீப்பர் பேருந்தான இதில் அனைத்துப் பயணிகளும் கீழ்தள சீட்டுகளில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். இறுதி இருக்கையில் ராஜபாளையம், புதுப்பாளையத்தைச் சேர்ந்த மகேந்திரன் மகன் ராம்சுந்தர் (21) என்பவர் தூங்கிக் கொண்டு வந்துள்ளார். இவர் சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.இ. படித்து வருகிறார். பேருந்தின் பின் புறத்திலிருந்து வயர்கள் கருகும் வாடை அடித்ததை அறிந்து, அனைத்துப் பயணிகளையும் உஷார் படுத்தி எழுப்பி விட்டுக் கொண்டே ஓட்டுநர் இருக்கையை நோக்கி ஓடி, பேருந்தை நிறுத்தக் கூறியுள்ளார். உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு, அனைத்துப் பயணிகளும் தங்களது உடமைகளுடன் தப்பி இறங்கி ஓடினர்.
ஓட்டுநர்கள் பேருந்தில் இருந்த நீரைக் கொண்டு தீயை அணைக்க முற்பட்டுள்ளனர். ஆனால் தீயைக் கட்டுப்படுத்த இயலவில்லை. சில நிமிடங்களில் பேருந்து முழுவதும் தீப்பற்றி கொளுந்துவிட்டு தீ எரியத் தொடங்கியுள்ளது.
பயணிகள் சிலர் அவசர தொலைபேசி எண்களான 100 மற்றும் 101 க்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் காவல் துறையினர் அழகாபுரி செக்போஸ்டில் சொல்லுங்கள் என்றும், தீயணைப்பு கட்டுப்பாட்டு அறையில் ஒரு தொலைபேசி எண் கொடுத்து அதில் தொடர்பு கொள்ளவும் என்றும் மிகவும் சாதாராணமாகக் கூறியுள்ளார்கள். பேருந்து முற்றிலும் எரிந்து நாசமான நிலையில் சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு தீயணைப்புப் படையினர் வந்து தீயை அணைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...