முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

உள்ளாட்சி தேர்தலில் பாராளுமன்றத் தேர்தலை விட மோசமான தோல்வியை திமுக சந்திக்கும்: கே.டி.ராஜேந்திரபாலாஜி

வரும் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பாராளுமன்றத் தேர்தலில் சந்தித்த தோல்வியைவிட மோசமான தோல்வியை திமுக சந்திக்கும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

News image
Updated On :24 ஜூலை 2016, 10:09 am

கோ.ஜெயக்குமார்

வரும் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பாராளுமன்றத் தேர்தலில் சந்தித்த தோல்வியைவிட மோசமான தோல்வியை திமுக சந்திக்கும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில், வரும் உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் அதிமுக வெற்றி பெறுவதற்கான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா தலைமையில் நடைபெற்றது.

கட்சியின் பொருளாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் வரவேற்றார்.இதில் கலந்து கொண்டு கட்சியின் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

அதிமுக கிளைச் செயலாளராக, வார்டு உறுப்பினராக இருந்து கொண்டு ஏழைகள் ஆதரவற்றோருக்கு குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை உள்ளிட்டவற்றை சட்டத்திற்குட்பட்டு, அதிகாரிகளிடம் விண்ணப்பித்து வாங்கித் தரும் அளவிற்கு அதிகாரம் கூட திமுக சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு கிடையாது.

இதில் இவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்கிறார்கள்.தமிழக முதல்வரின் நலத்திட்டங்களால் மக்கள் மன நிறைவில் உள்ளார்கள். கட்சித் தொண்டர்கள் பொதுமக்களை பரிவுடன் அணுகி, அதிமுகவிற்கு வாக்கு பெற்று மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் அதிமுகவே வெற்றி பெற்றது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

அதிமுக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் அதிமுக தலைமையும், மாவட்ட அதிமுகவும் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றார் அவர்.நிகழ்ச்சியில் கட்சியின் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், வத்திராயிருப்பு ஒன்றியச் செயலாளர் சுப்புராஜ், மம்சாபுரம் நகரச் செயலாளர் ப.அய்யனார்.

நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், மாவட்டக் கவுன்சிலர் த.முத்தையா, அரசு வழக்குரைஞர்கள் அ.மங்களசாமி, எம்.ஜெகதீசன், முருகன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.