விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அண்ணாமலைப் பல்கலையில் பிஎஸ்சி வேளாண்மை படிப்பிற்கான கலந்தாய்வு: 601 பேருக்கு சேர்க்கை ஆணை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture), தோட்டக்கலை (B.Sc. Horticulture) படிப்புகளுக்கான கலந்தாய்வில் ஆயிரம் இடங்களுக்கு 601 மாணவ, மாணவியர்களே அனுமதி சேர்க்கை ஆணை பெற்றனர்.

News image
Updated On :26 ஜூலை 2016, 3:10 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture), தோட்டக்கலை (B.Sc. Horticulture) படிப்புகளுக்கான கலந்தாய்வில் ஆயிரம் இடங்களுக்கு 601 மாணவ, மாணவியர்களே அனுமதி சேர்க்கை ஆணை பெற்றனர்.

காலி இடங்களுக்கான இரண்டாவது கட்ட கலந்தாய்வு ஜூலை 30-ம் தேதி நடைபெறுகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழக இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture), தோட்டக்கலை (B.Sc. Horticulture) படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture) படிப்புக்கு 11595 விண்ணப்பங்களும், மற்றும் தோட்டக்கலை (B.Sc. Horticulture)  படிப்புக்கு  601 விண்ணப்பங்களும் பெறப்பட்டது. 

அவற்றில் 711 இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture) விண்ணப்பங்களும், 35 தோட்டக்கலை (B.Sc. Horticulture) விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன.  இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture) படிப்புக்கு 1000 இடங்கள் மற்றும் தோட்டக்கலை (B.Sc. Horticulture) படிப்புக்கு 70 இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.  இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture), தோட்டக்கலை (B.Sc. Horticulture) படிப்புகளுக்கு “சமவாய்ப்பு” எண்கள் (Random Number) ஜூலை 13-ம் தேதியும், “தரவரிசை பட்டியல்” (Rank List) ஜூலை 16-ம் தேதியும்அ வெளியிடப்பட்டது. 

இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture), படிப்புக்கு ஜூலை 23-ம் தேதியும், ஜூலை 25-ம் தேதியும் கலந்தாய்வு நடைபெற்றது. தோட்டக்கலை (B.Sc. Horticulture) படிப்புக்கு ஜூலை 26-ம் தேதி கலந்தாய்வு நடைபெற்றது. இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture) படிப்புக்கு 2070 மாணவர்களும், தோட்டக்கலை (B.Sc. Horticulture) படிப்புக்கு 228 மாணவர்களும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். 601 மாணவர்கள் இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture) படிப்புக்கும், 59 மாணவர்கள் தோட்டக்கலை (B.Sc. Horticulture) படிப்புக்கும் சேர்க்கை கடிதம் பெற்றனர்.

மீதமுள்ள இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture), படிப்புக்கான 399 இடங்கள் மற்றும்  தோட்டக்கலை (B.Sc. Horticulture) படிப்புக்கான 11 இடங்களுக்கு  வருகிற ஜூலை 30-ம் தேதி சனிக்கிழமை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வுக்கு 1104 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

கலந்தாய்வுக்கான அனுமதி கடிதத்தை தகுதியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக இணைய தளத்தில்www.annamalaiuniversity.ac.in பதிவிறக்கம் செய்து கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். குறுந்தகவல் (SMS) மூலமாகவும் அனுப்பப்படும். மாணவர்களுக்கு தனியாக கலந்தாய்வு கடிதம் அனுப்பப்படமாட்டாது என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.