பின்னர் துணைவேந்தர் செ.மணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1260 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு இயங்கி வருகிறது. தினசரி 1500 முதல் 2000 வரை புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி ஆயிரம் உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் நிதிசுமை காரணமாக கடந்த 3 மாதங்களாக கட்டணமில்லா உணவு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது தமிழக முதல்வர் ஆணையின்படி, நிதிசுமை இருந்த போதிலும் நோயாளிகளின் நலன் கருதி மூன்று வேளையும் கட்டமில்லா உணவு வழங்கும் தி்ட்டத்தை தொடங்கியுள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ.1.50 கோடி கூடுதல் செலவினமாகும் என துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்தார்.