திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தந்தையை அரிவாளால் வெட்ட முயன்றதை தடுத்தவருக்கு அரிவாள் வெட்டு: மகன் கைது

போடியில் திங்கள் கிழமை, தந்தையை அரிவாளால் வெட்ட முயன்றபோது தடுத்தவரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற மகன் கைது செய்யப்பட்டார்.

Updated On :27 ஜூன் 2016, 5:20 pm IST

போடியில் திங்கள் கிழமை, தந்தையை அரிவாளால் வெட்ட முயன்றபோது தடுத்தவரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற மகன் கைது செய்யப்பட்டார்.

போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனியை சேர்ந்தவர் துரைச்சாமி மகன் இளந்தமிழன் (32). இவர் இப்பகுதியில் அடிக்கடி தகராறு செய்து வருவாராம். திங்கள் கிழமை இதேபோல் இவர் தகராறில் ஈடுபட்டு தனது தந்தையையே அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது.

     இப்போது இவரது வீட்டின் அருகில் வசிக்கும் பாலு மகன் முருகன் (44) என்பவர் தடுக்க சென்றாராம். அப்போது இளந்தமிழன் தனது கையில் இருந்த அரிவாளால் முருகனை சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதில் முருகன் பலத்த காயமடைந்தார்.

 அவரை அப்பகுதியினர் மீட்டு போடி அரசு மருத்துவமையில் சேர்த்தனர். முருகன் கொடுத்த புகாரின் பேரில் போடி நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பா.சேகர், சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜா மற்றும் போலீஸôர் வழக்கு பதிவு செய்து இளந்தமிழனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.