இரு மோட்டார் சைக்கிள் திருடிய 6-ம் வகுப்பு மாணவர் கைது


ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு மோட்டார் சைக்கிள்களைத் திருடிய 6-ம் வகுப்பு மாணவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், முதலியார்பட்டி தெருவைச் சேர்ந்தவர் ரா.ஆசைத்தம்பி. வக்கீல் குமஸ்தாவான இவர், தனது மோட்டார் சைக்கிளை தெற்கு மாட வீதியில் உள்ள அலுவலகத்தின் முன்பு 5.4.17-ம் தேதி மாலை 5 மணிக்கு நிறுத்தி வைத்திருந்தார். 6 மணிக்கு வந்து பார்த்த போது வண்டியைக் காணவில்லை. இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஊரணிபட்டி தெருவைச் சேர்ந்தவர் பெ.சந்திரகுமார் (73). இவர் தனது இரு சக்கர வாகனத்தை மஞ்சப்பூத்தெருவில் உள்ள ஒரு இடத்தில் நிறுத்தி வைத்திருந்தார். வேலையை முடித்துவிட்டு வந்து பார்த்த போது வண்டியைக் காணவில்லையாம். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
காவல் ஆய்வாளர் ஜெ.மகேஸ்குமார் தனிப்படை அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தார்.
இந்நிலையில் தெற்கு மாட வீதியில் அலுவலகத்தின் முன்பு பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் சிறுவன் ஒருவர் கள்ளச் சாவி கொண்டு வண்டியை திருடிச் செல்வது பதிவாகியிருந்து.
விசாரணையில் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லபுரம் தெருவைச் சேர்ந்த பாண்டி மகன் முனீஸ்வரன் (எ) சிவா என்பது தெரியவந்தது. இவர் ஸ்ரீவில்புத்தூர் நகர்மன்ற மேட்டுத் தெரு நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இது போன்ற மாணவர்கள் 5 மோட்டார் சைக்கிள்களைத் திருடி கண்மாயில் ஆங்காங்கே பதுக்கி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மாணவர் முனீஸ்வரன் (எ) சிவாவை போலீஸார் கைது செய்து வாகனங்களைப் பறிமுதல் செய்து விருதுநகரில் உள்ள இளம் சிறார் நீதிக் குழுமத்தின் முன்பு ஆஜர் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...