வி.பி.எம்.எம். மகளிர் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை கல்வி


ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை கல்வி நிறுவனத் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர் தலைமையில், தாளாளர் பழனிச்செல்வி முன்னிலையில் நடைபெற்றது. கல்லூரியின் இயக்குநர் டாக்டர் ரா.சபரிமாலா வரவேற்றார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறை பேராசிரியர் எம்.சிவக்குமார் மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
ஆசிரியர்கள் சிறப்புத் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். முதலாவது ஆளுமைத் திறன் வளர்க்க வேண்டும். ஆளுமை என்பது வெளித்தோற்றத்தைப் பொறுத்ததல்ல. மனப்பான்மை, மனயெழுச்சி, பொறுமை, விடாமுயற்சி போன்ற சிறந்த செயல்களை உள்ளடக்கியது. ஆசிரியர் மாணவர் உறவு சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும். பொறுமை, நிதானத்துடன் மாணவர்களை வழி நடத்த வேண்டும். நாம் சார்ந்துள்ள தொழிலில் முழு ஈடுபாட்டுடன் செயல்படும் போது வெற்றி கிடைக்கும். சிறந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்க உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள் என்றார் அவர்.
விழாவில் கல்வி நிறுவனத் துணைத் தலைவர் வி.பி.எம்.எஸ்.தங்கபிரபு, இணைத் தாளாளர் துர்கா மீனலோஷினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முதல்வர் தெய்வம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...