முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா கோலாகலம்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் ஒன்றிய அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :17 ஜனவரி 2017, 8:48 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் ஒன்றிய அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும் கட்சியின் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளருமான மு.சந்திரபிரபா முத்தையா, கட்சியின் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ் ஆகியோர் தலைமையில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் தேரடி திடலில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் அங்கு திரண்டிருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. 

பின்னர் அங்கிருந்து பேரணியாக பேருந்து நிலையத்திற்கு வந்து, அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா முத்தையை சார்பில், ரூ.3 லட்சம் மதிப்பில் வத்திராயிருப்பு மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியப் பகுதியில் ஏழைகளுக்கு ஆடைகள், மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை, ஆதரவற்றோரின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் வகையில் தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

கட்சியின் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ் சார்பில், ரூ.2 லட்சம் மதிப்பில் நகரின் பல்வேறு இடங்களில் அன்னதானம், ஆதரவற்றோருக்கு வேஷ்டி, சேலை, ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டது.

மேலும் நகரின் 33 வார்டுகளிலும் எம்.ஜி.ஆரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு, கட்சிக் கொடியேற்றப்பட்டது.

நிகழ்ச்சிகளில் நகர் பொருளாளர் கருமாரி எஸ்.முருகன், ஒன்றிய பொருளாளர் த.முத்தையா, மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் எம்.முருகன், வத்திராயிருப்பு ஒன்றியச் செயலாளர் எஸ்.சுப்புராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.கே.மயில்சாமி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன், நகர வங்கித் தலைவர் எம்.எம்.பாலசுப்பிரமணியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் என்.அழகர்சாமி, மம்சாபுரம் நகரச் செயலாளர் வழக்குரைஞர் ப.அய்யனார் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.