தூத்துக்குடியில் ஜல்லிக்கட்டுக்கான தொடர் போராட்டம் கைவிடப்பட்டது
ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் வேண்டும் என தூத்துக்குடியில் கடந்த 7 நாட்களாக நடைபெற்று போராட்டம் இன்று கைவிடப்பட்டுள்ளது.


தூத்துக்குடி: ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் வேண்டும் என தூத்துக்குடியில் கடந்த 7 நாட்களாக நடைபெற்று போராட்டம் இன்று கைவிடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 17-ஆம் தேதி இளைஞர்கள், கல்லூரி மாணவர், மாணவிகள் போராட்டத்தை தொடங்கினர். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மைதானத்தில் கடந்த 6 நாள்களாக ஆயிரக்கணக்கான மாணவர், மாணவிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் சட்டம் வேண்டும் என வலியுறுத்தி 6 ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் பலர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பேசினர். நிரந்தர சட்டம் நிறைவேற்ற வேண்டும். ஜல்லிக்கட்டு விவகாரம் மட்டுமேன்றி தண்ணீர் பிரச்னை, சுற்றுச்சூழல் பிரச்னை என அனைத்துப் பிரச்னைகளிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ள அரசு அதுதொடர்பாக சில வாக்குறுதிகளை அளித்துள்ளது. அந்த வாக்குறுதிகள் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் போராட்டகாரர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். இவர்களுடன் காவல்துறை அதிகாரிகள் செல்வ நாகரத்தினம், சீமைச்சாமி உள்ளிட்டவர்களும் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து கடந்து 6 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை கைவிடுவதாகவும் கலைந்து செல்லுவதாக அறிவித்து கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...