ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஜல்லிக்கட்டு: பாதுகாப்புப் பணியிலிருந்து காவலர் மாடு முட்டியதில் சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில்


ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பாதுகாப்புக்கு இருந்த தனி ஆயுதப்படை காவலர் சங்கர் மாடு முட்டியதில் உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கான்சாபுரத்தில் பல ஆண்டுகளாக பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும். உச்ச நீதிமன்ற தடையை அடுத்து மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. தற்போது தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியதையடுத்து, ஜல்லிக்கட்டு திங்கிழமை நடைபெற்றது.
கான்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்சாமி மகன் சங்கர் (30). இவர்
2009-ம் ஆண்டு காவலராக தேர்வு செய்யப்பட்டு சிவகாசி தனி ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் முடித்து முத்துசடச்சி என்ற மனைவியும், குருபாண்டி (5), குருசாதனா (3) என்ற இரு குழந்தைகள் உண்டு.
இந்நிலையில் ஜல்லிக்கட்டில் வாடிவாசல் அருகே பாதுகாப்புப் பணியில் காவலர் சங்கர் ஈடுபட்டிருந்தார். அப்போது சீறிபாய்ந்து வந்த காளை ஒன்று சங்கர் மீது முட்டியது. இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனடியாக முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக வத்திராயிருப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டில் 15 ஜல்லிக்கட்டு காளைகள் உள்ளிட்ட 135 மாடுகள் கலந்து கொண்டனர்.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆய்வாளர் ஜே.மகேஸ்குமார் தலைமையில் போலீஸார் செய்திருந்தனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...