மாவட்ட அளவிலான கணினி போட்டி: ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவர் முதலிடம்
தகவல் தொழில் நுட்பம் மற்றும் பண்பாட்டுத் துறை சார்பில், அனைவருக்கும் கல்வி இயக்கம்


தகவல் தொழில் நுட்பம் மற்றும் பண்பாட்டுத் துறை சார்பில், அனைவருக்கும் கல்வி இயக்கம் வழியாக, மாவட்ட அளவில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கணினிப் போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளி மாணவர் முதலிடம் பெற்று ரொக்கப் பரிசு வென்றார்.
கிராமப்புற மாணவர்களின் பல்வேறு திறன்களை வளர்ப்பதற்காக, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பல்வேறு வகையான பயிற்சிகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் தொழில் நுட்பம் மற்றும் பண்பாட்டுத் துறை சார்பில் நடத்தப்பட்ட கணினி போட்டியில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் எம்.அரசு உடையார் முதலிடம் பெற்றார்.
மேலும் பெண் கல்வி, சுகாதாரம் சார்ந்த பல்திறன் போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையம் சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 20 மாணவ மாணவியர் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை கிருஷ்ணன்கோவிலில் உள்ள வட்டார வளமையத்தில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி முன்னிலை வகித்தார். ஆசிரியப் பயிற்றுநர் மீனலோஷினி வரவேற்றார்.
மாணவர் அரசு உடையாருக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழையும், பல்திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழையும் வழங்கி அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் கே.நல்லதம்பி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியப் பயிற்றுநர் கனகலட்சுமி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...