ஸ்ரீவில்லிபுத்தூர் பிரசித்தி பெற்ற கோவில் அருகே நகராட்சி குப்பை சேகரிக்கும் மையம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலின் அருகே நகராட்சி சார்பில் புதியதாக வைக்கப்பட்டுள்ள


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலின் அருகே நகராட்சி சார்பில் புதியதாக வைக்கப்பட்டுள்ள குப்பை சேகரிக்கும் மையத்தால் பக்தர்களும் அப் பகுதி பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை சாலையில் பிரசித்தி பெற்ற பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். மேலும் இக் கோவிலின் மிக அருகில் பெரிய தனியார் மருத்துவமனை மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
மங்காபுரம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், அரசு போக்குவரத்துக்கழக பணிமனை எதிரேயுள்ள கண்மாய்க்கு அருகே நகராட்சி சார்பில் குப்பை சேகரிக்கும் மையம் அமைக்கப்பட்டு நீண்டகாலமாக அங்கு சேகரிக்கப்பட்டு வந்தது.
தற்போது அந்த இடத்தில் சிலர் வாகனங்களை நிறுத்துவதற்காக, இப் பகுதியில் மேஸ்திரியின் முயற்சியால், குப்பை சேகரிக்கும் மையம் பட்டத்தரசியம்மன் கோவில் அருகே கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
இதிலிருந்து வரும் துர்நாற்றம் மற்றும் சிதறிக் கிடக்கும் குப்பையால் பக்தர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இது குறித்து கோவில் பொறுப்பாளர்கள் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த குப்பை சேகரிக்கும் மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்களும் இப் பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...