ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குப்பையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
விருதுநநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெடுங்குளத்தில் பிறந்து சில மணி நேரமே ஆண் குழந்தை


ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெடுங்குளத்தில் பிறந்து சில மணி நேரமே ஆண் குழந்தை பையுடன் குப்பை மேட்டில் திங்கள்கிழமை வீசப்பட்டது தெரியவந்தது.
வத்திராயிப்பு அருகே உள்ளது நெடுங்குளம். இங்குள்ள விவசாய நிலத்திற்கு செல்லும் வழியில் குப்பை மேடு ஒன்று உள்ளது. அவ்வழியே விவசாயி ஒருவர் தனது நிலத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, குப்பை மேட்டில் கட்டைப் பை ஒன்று கிடந்துள்ளது. அந்தப் பை லேசாக அசையவே, அந்த விவசாயி, கட்டைப் பையை பிரித்துப் பார்த்துள்ளார். அதன் உள்ளே, துணியால் சுற்றிய நிலையில், பிறந்து ஒரு மணி நேரமே ஆகிய ஆண் குழந்தை ஒன்று கிடந்துள்ளது.
இதையடுத்து, அவர் கூமாப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையை மீட்டு, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள், குழந்தைக்கு முதலுதவி சிகிச்சையளித்தனர்.
பின்பு, மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கூமாப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குழந்தையின் தாயாரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...